Thursday, August 4, 2016

கோழி பண்ணை அமைப்பவர்கள் நோய் தடுப்பை பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டும் ..


இதை படிபவர்கள் பரப்புங்கள் "share" செய்யுங்கள்..
ரத்த கழிச்சல் நோய்க்கு மருந்து ..
AMPROLIUM 'மருத்துவர் ஆலோசனை படி கொடுக்கவும்'
வெள்ளை கழிச்சல் மருந்து ..
("lasota and rdvk injuction")
மூலிகை மருத்துவம் வெள்ளை கழிச்சல் :
சின்ன சீரகம் 10 கிராம்
கீழாநெல்லி 50 கிராம்
மிளகு 5 கிராம்
மஞ்சள் தூள் 10 கிராம்
வெங்காயம் 5 பல்
பூண்டு 5 பல்
சிகிச்சை முறை (வாய் வழியாக)
சீரகம் மற்றும் மிளகினை இடித்த பின்பு மற்ற பொருள்களோடு கலந்து அரைத்து இக்கலவையை தீவனம் அல்லது அரிசி குருணையில் கலந்து கொடுக்கவும். மிகவும் பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு சிறு சிறு உருண்டைகளாக உட் செலுத்தவேண்டும்.

Thursday, July 28, 2016

அலங்காரக் கோழி வளர்ப்பு

அலங்காரக் கோழி வளர்ப்பு
குறைந்த பராமரிப்பும் அதிக லாபமும் கிடைப்பதால் அலங்காரக் கோழி வளர்ப்பு,
இது ஃபேன்ஸி யுகம். வசதி படைத்தவர்கள் மட்டுமல்ல, அழகியல் ஆர்வமுள்ளவர்களும் அழகுக்காகப் பல்வேறு உயிரினங்களை வளர்க்கிறார்கள். பள்ளிகள், கல்லூரிகள், நகர்ப்புற வீடுகள் என அனைத்து இடங்களிலும் நாய், பூனை, புறா, கிளி, வண்ண மீன்கள் என அழகுக்காக வளர்க்கப்படும் 'ஃபேன்ஸி’ உயிரினங்கள் வரிசையில் சமீப காலமாக அலங்காரக் கோழிகளும் இடம்பிடித்து வருகின்றன. நாட்டுக்கோழியைவிட குறைந்த பராமரிப்பும் அதிக லாபமும் கிடைப்பதால் அலங்காரக் கோழி வளர்ப்பு, புதிய தொழில் வாய்ப்பாக மாறி வருகிறது.
வீட்டு மொட்டை மாடியில் முப்பது ஆண்டுகளாக அலங்காரக் கோழிகளை வளர்த்துவரும் சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த சார்லஸ் காபிரியேல் சொல்வதைக் கேளுங்கள்.
''கோழிகளின் முட்டை இடும் திறன், வளர்ச்சி, உருவ அமைப்பு, குணங்களின் அடிப்படையில் முட்டைக் கோழி, இறைச்சிக் கோழி, சண்டைக் கோழி, அலங்காரக் கோழிகள் என இனம் பிரிக்கிறார்கள். போன்சாய் மரங்களைப் போல சிறிய உருவம், நளினமான நடை, வண்ண வண்ண இறகுகள், கால் நுனியில் அடர்த்தியான ரோமம் ஆகியவை அலங்காரக் கோழிகளின் அடையாளம். இவை பெரும்பாலும் வெளிநாடுகளை தாயகமாகக் கொண்டவை.
10 ஆயிரம் முதலீடு போதும்!
இவற்றை வணிக ரீதியாக வளர்க்க அதிக இடம் தேவையில்லை. வீட்டு மொட்டை மாடியில்கூட வளர்க்கலாம். அதேபோல அதிக எண்ணிக்கையில் கோழிகளை பராமரிக்கவும் தேவையில்லை. சுமார் இருபது கோழிகளை வளர்த்தாலும் லட்சங்களில் வருமானம் பார்க்கலாம். இதை வளர்க்க, 10-க்கு 10 அடி அளவில் வெயில் நேரடியாகத் தாக்காமலும், மழை பெய்யும்போது சாரல் அடிக்காமலும் இருப்பது போல குறைந்த செலவில் கொட்டகை அமைத்துக்கொண்டால் போதும். அலங்காரக் கோழி வளர்ப்புக்கு 10 ஆயிரம் முதலீடு போதுமானது.
ஆயிரம் முதல் லட்சம் வரை!
அலங்காரக் கோழிகளில் அமெரிக்கன் கிரில், பிரம்மா, கொச்சின் பேந்தம், சில்வர் சில்கி, சில்வர் பெசன்ட், போலீஸ் கேப், குட்டைவால் கோழி, ஃபீனிக்ஸ், பேந்தம், பிளாக்மினி கொச்சின், பூட்டேட் பேந்தம், பஞ்சுக்கோழி, டேபிள் ஃபைட்டர், செப்பரேட்டர், மினி வொய்ட் ரோஸ் கேப், கடக்நாத், கிராப் என பலவகையான கோழிகள் இருக்கின்றன. ஒவ்வொரு கோழியும் ஒவ்வொரு விலையில் விற்கப்படுகின்றன. ஒரு கோழி சுமாராக 1,000 ரூபாய்க்கு மேல் விற்பனையாகும். ஒரு சில அபூர்வ ரக வகைக் கோழிகள் ஒரு லட்ச ரூபாய் வரைக்கும்கூட விற்பனையாகின்றன. சில்கி, கடக்நாத் ஆகிய ரக கோழிகளின் இறைச்சி மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது
20 கோழிகளுடன் தொடங்கலாம்!
முதன் முதலாக இத்தொழிலில் இறங்குபவர்கள் அதிக விற்பனை வாய்ப்புள்ள ரகங்களில் குறைந்த எண்ணிக்கையில் குஞ்சுகளை வாங்கி வளர்க்க வேண்டும். சில்கி, போலீஸ் கேப், கொச்சின், சீ பிரைட் ஆகிய நான்கு ரகங்களுக்கு அதிக விற்பனை வாய்ப்பு உள்ளது. மேற்படி ரகங்களில் தலா 3 பெட்டை, 2 சேவல்களை வாங்க வேண்டும். மொத்தம் 20 கோழிகளுடன் தொழிலைத் தொடங்கி, அனுபவத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொண்ட பிறகு அதிக எண்ணிக்கையில் வளர்க்கலாம். ஒரு நாள் வயதுடைய குஞ்சு 300 ரூபாய்க்கும், எட்டு வார வயதான கோழிகள் 800 ரூபாய்க்கும் கிடைக்கும். முதன் முதலில் இந்தத் தொழிலில் இறங்குபவர்கள் எட்டு வார வயதுடைய குஞ்சுகளை வாங்கி வளர்ப்பதுதான் நல்லது. தீவனம் பராமரிப்பு அனைத்தும் நாட்டுக்கோழிக்குச் செய்வது போலவே செய்ய வேண்டும். 25-ம் வாரத்திலிருந்து முட்டை போடத் தொடங்கும். நாட்டுக்கோழிகளைப் போல தினமும் முட்டை கிடைக்காது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறைதான் முட்டை கிடைக்கும்.
ஒரு வருஷம்... ஒரு லட்சம்!
ஒரு ஆண்டுக்கு சில்கியில் 160 முட்டையும், கொச்சின் கோழி மூலம் 120 முட்டைகளும், போலீஸ் கேப் மூலமாக 100 முட்டைகளும், சீ பிரைட் மூலம் 60 முட்டைகளும் கிடைக்கும். இந்த முட்டைகளை நாட்டுக்கோழி முட்டைகளுடன் அடைவைத்து பொறிக்க வைக்கலாம். அல்லது சிறிய அளவிலான இன்குபேட்டர் மூலமாகப் பொறிக்க செய்யலாம். அடை வைத்ததிலிருந்து 21 நாளில் குஞ்சு பொறிக்கும். இந்த குஞ்சுகளை இரண்டு மாதங்கள் வளர்த்து விற்பனை செய்யலாம். அலங்கார கோழிகள் இடும் முட்டைகளில் சராசரியாக 60 சதவிகிதம் தான் பொறிக்கும். இந்த கணக்குப்படி பார்த்தால், சில்கி முட்டை மூலம் 96 குஞ்சுகள், கொச்சின் மூலமாக 72 குஞ்சுகள், போலீஸ் கேப் மூலம் 60 குஞ்சுகள் மற்றும் சீ பிரைட் மூலம் 36 குஞ்சுகள் என மொத்தம் 264 குஞ்சுகள் கிடைக்கும். இதில் இறப்பு விகிதத்தைக் கழித்தால், ஆண்டுக்கு சராசரியாக 200 குஞ்சுகள் கிடைக்கும். ஒரு குஞ்சு 800 ரூபாய் விலையில் விற்பனை செய்தால் 1.60 லட்ச ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். இதில் ஒரு ஆண்டுக்கான செலவாக அதிகபட்சம் 60 ஆயிரம் ரூபாயைக் கழித்துவிட்டாலும் ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வருமானமாகக் கிடைக்கும்.
விற்பனை வாய்ப்பு!
விற்பனை வாய்ப்பைப் பற்றி கவலையே இல்லை. உங்களிடம் அலங்காரக் கோழிகள் இருப்பது தெரிந்தால் வியாபாரிகளே வந்து வாங்கிக்கொள்வார்கள். அப்படியும் விற்பனை செய்ய முடியாதவர்கள் எங்களிடம் விற்பனை செய்யலாம். எட்டு வார வயதுடைய குஞ்சுகளை 600 ரூபாய் கொடுத்து வாங்கிக்கொள்வோம்'' என்று முடித்தார் அவர்.
அட, இதுவும் நல்ல பிஸினஸா இருக்கும் போலிருக்கே!
#TkpFarms
#Iniyan
www.nattukozhifarms.in
www.facebook.com/tk.pannai
#nattu kozhi valarpu
#nattukozhivalarputamilnadu


வேலி மசால் பெற

வேலி மசால் பெற
DD—டிடி பெயர் : "programcoordinator kvk namakkal"
மொத்தம் 550 ருபாய் அனுப்புவும் தபால் செலவும் சேர்த்து 550 இக்கு டிடி எடுக்க வேண்டும்
“550” dd “Professionla querior” = இல் அனுப்ப வேண்டும்
To
திட்ட ஒருங்கினைப்பாளர்
வேளான் அறவியல் நிலையம்
கால்நடை மருத்துவ கல்லுரி மற்றும்
ஆராய்ச்சி நிலைய வளாகம்
நாமக்கல் 637002
தொலைபேசி எண்: 04286-266345

From
“உங்களுடைய முழு முகவரி”
மேலும் உங்களுக்கு என்ன விதை வேண்டும்
என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும்

தீவனப் பயிர் விதைகள்
விலை மற்றும் கிடைக்கும் இடம்
வேலி மசால் - ரூ . 500 / கிலோ
முயல் மசால் - ரூ. 350 / கிலோ
தட்டைப் பயறு - ரூ. 150 / கிலோ
சூபாபுல் - ரூ. 300 / கிலோ
அகத்தி - ரூ. 500 / கிலோ
Co FS 29 - ரூ. 400 /கிலோ
கினியாப் புல் - ரூ. 1 / கிழங்கு
கோ 4 - ரூ. 0.50 / கரணைகிடைக்கும்
இடம்வேளாண் அறிவியல் மையம்நாமக்கல் - 637 002.தொலைபேசி 04286 - 266 345DD எடுத்து அனுப்பினால் கூரியர் மூலம் விதைகளை அனுப்பி வைக்கிறார்கள்.

#TkpFarms
#Iniyan
www.nattukozhifarms.in
www.facebook.com/tk.pannai
#nattu kozhi valarpu
#nattukozhivalarputamilnadu

நாட்டுக் கோழிகளுக்கு கரையான் தீவனம்..!!

நாட்டுக் கோழிகளுக்கு கரையான் தீவனம்..!!
=================================
கரையானின் தீமைகள் குறித்தே அறிந்த பலருக்கு கரையான் தீவனமாகப் பயன்படும் என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும். நாட்டுக் கோழி வளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகிறது. கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால், கரையான் சாப்பிட்ட குஞ்சுகள் மற்ற குஞ்சுகளைவிட இருமடங்காக வளர்ச்சியடையும்.
கரையான் உற்பத்தி செய்ய தேவையான பொருட்கள்:
-------------------------------------------------------------------------------
1. ஒரு பழைய பானை
2. கிழிந்த கோணி/சாக்கு
3. காய்ந்த சாணம்
4. கந்தல் துணி, இற்றுப்போன கட்டை, மட்டை, காய்ந்த இலை, ஓலை போன்ற நார்ப்பொருட்கள்
கரையான் உற்பத்தி செய்முறை:
-------------------------------------------------
மேற்கண்டவற்றை பழைய பானையினுள் திணித்து சிறிது நீர் தெளித்து வீட்டிற்கு வெளியே தரையில் கவிழ்த்து வைத்துவிட வேண்டும். முதல் நாள் மாலை கவிழ்த்து வைத்தால் மறுநாள் காலை திறந்து பார்த்தால் தேவையான கரையான் சேர்ந்திருக்கும். தாய்க்கோழி உதவியுடன் குஞ்சுகள் உடனடியாக எல்லா கரையானையும் தின்று விடும். கரையான் தின்று அரை மணி நேரத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது.
ஒரு பானையில் சேரும் கரையான் 10-15 குஞ்சுகளுக்கு போதுமானது. கிடைக்கும் கரையானின் அளவு இடத்திற்கு இடம் மாறுபடும். செம்மண் பகுதியில் அதிகம் கிடைக்கும். அதிகம் தேவை என்றால் ஒன்றுக்கு மேல் எத்தனை பானைகள் வேண்டுமானாலும் கவிழ்த்து வைக்கலாம். மக்கள் கரையான் உற்பத்தியை காலங்காலமாக கோழிக்குஞ்சுத் தீவனத்திற்காக செய்தார்கள். இத் தொழில் நுட்பத்தை அறிவியல் நோக்கில் பார்க்கலாம்.
கரையான் செயலாற்றும் முறை:
-------------------------------------------------
இங்கு குறிப்பிடும் கரையான் ஈர மரக்கரையானாகும். (Dandy wood termites) மேலும் கரையான் ஆடு,மாடுகளைப் போல் நார்ப் பொருளை உண்டு வாழும் பூச்சியினமாகும். கரையானின் குடலிலும் நார்ப் பொருள்களைச் செரிக்க நுண்ணுயிரிகள் உண்டு. கரையான் சக்திக்கு நார்ப்பொருளையும், புரதத் தேவைக்கு மரக்கட்டையிலுள்ள பூஞ்சக்காளானையும் பயன்படுத்திக்கொள்கிறது.
பானையிலுள்ள பொருட்களில் நீர் தெளிப்பது கரையான் எளிதில் தாக்க ஏதுவாக அமையும். கரையான்கள் பொதுவாக இரவில் அதிகமாக செயல்படும் என்பதால் மாலையில் பானை கவிழ்க்கப்படுகிறது. காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக கரையானை எடுத்து விடுவது சிறந்தது. எறும்புகள் தாக்குதல் உள்ள பகுதியில் பகலில் அலைந்து திரியும் எறும்புகள் கரையானைத் தின்று விடும்.
கரையான் சத்து மிக்கது. அதில் புரதம் 36%, கொழுப்பு 44.4%, மொத்த எரிசக்தி 560கலோரி/ 100கிராம் போன்றவை உள்ளன.
சில வகை கரையானில் வளர்ச்சி ஊக்கி 20% உள்ளது. இதன் காரணமாகவே கோழிக் குஞ்சுகள் விரைந்து வளர்ந்து எடை கூடுகிறது. கோழிக் குஞ்சுகளுக்கு சிறந்த புரதம் செரிந்த தீவனமாக கரையான் அமைந்ததால், காலம் காலமாக தென் தமிழ்நாட்டு மக்களால் கரையான் உற்பத்தி செய்யப்பட்டது. இச்செயல்பாடுகளை ஆய்விட்டபோது பல கூடுதல் நன்மைகள் ஏற்படுவது தெரியவந்தது.
நன்மைகள்:
------------------
கரையான் உற்பத்திக்கு என்று பானை கவிழ்த்தும் போது கரையான்கள் வீடுகள், வீட்டுப் பொருட்கள் மற்றும் மரங்களைத் தாக்குவதில்லை. பானையிலிருந்து எழும் ஒரு வகை வாசனை கரையான்களை கவர்ந்து ஈர்க்கும். ஆகவே மற்ற இடங்களைத் தாக்குவதில்லை. பானையில் வைக்கும் நனைந்த பொருட்கள் மற்றும் சாணம் கரையான்களுக்கு மிக பிடித்துள்ளன. கரையானைப் பிடித்து அழிப்பதற்குப் பதில் கோழிக் குஞ்சுக்கு தீவனமாகக் கொடுத்து விடுகிறோம்.
அடுத்து கரையானை ஒழிக்க கடுமையான பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தும்போது சுற்றுச் சூழலும் பாதிக்கப்படுகிறது அல்லவா?
முடிவாக கரையான் உற்பத்தி என்ற எளிய செலவற்ற ஒரு தொழில் நுட்பத்தால் மூன்று பயன்கள் விளைகின்றன.
1. செலவற்ற கோழிக்குஞ்சு தீவனம்.
2. வீட்டுப் பொருட்கள், மரங்களுக்குப் பாதுகாப்பு.
3. பூச்சிக் கொல்லிக்கு என்று செலவு கிடையாது. பூச்சிக் கொல்லி மருந்து தேவையில்லாததால் நமது சுற்றுப் புறச் சூழலும் பாதுகாக்கப்படுகிறது.
இன்றே செயல்படுங்கள், மாலை செயல்பட்டால் மறுநாள் காலை உங்கள் கோழிக் குஞ்சுகளுக்குத் தேவையான கரையான் கிடைத்துவிடும்.

#TkpFarms
#Iniyan
www.nattukozhifarms.in
www.facebook.com/tk.pannai
#nattu kozhi valarpu
#nattukozhivalarputamilnadu

பணம் சம்பாதிக்க. ஆயிரம் வழி உண்டு

வணக்கம் நண்பர்களே:
பணம் சம்பாதிக்க. ஆயிரம் வழி உண்டு.ஆனால் மனஅழூத்தம் இல்லாமல,படிப்பு அறிவு இல்லமா அதிக முதலிடு இல்லமால சம்பாத்தியம் செய்ய சில வழிகள் உள்ளன.அவறு இன்று நாட்டு கோழி பணம் பண்ணுவது எப்படி எண்ணு பார்போம். எடுத்துகாட்டு 1000₹ முதலீடு வைத்து எத்தனை சதவிதம் அதிக ஆக்கம் முடியும் பார்போம்.
விலை நாள் % நாட்டு கோழி முட்டை விலை:10 .(100 முட்டை விலை 1000) 1நா ள
1நாள் நாட்டு குஞ்சு விலை :40.( 90 குஞ்சு விலை 3600. ) 21 நாள்
1மாதம் நாட்டு குஞ்சு விலை 100.(80 குஞ்சு விலை 8000. ) 51நாள்
3 மாதம் நாட்டு குஞ்சு விலை 200.(80 குஞ்சு வி
லை 16000 ) 111 நாள்
6 மாதம் நாட்டு கோழி விலை 300.(80 குஞ்சு விலை 24000 ) 201 நாள்
8 மாதம் நாட்டு சேவல் விலை 700.(40 சேவல் விலை 28000+40 பொட்டை கோழி விலை:(40*2 கிலோ*300 =24000 ) 24000+28000=52000₹ நாள் .261.
30சேவல் விற்பனை மூலம் வருமானம் 30*700=21000.அதை கொண்டு 35 பெட்டை வாங்கி விடவும்.(21000/600=35).ஆக மொத்தம. 10 சேவல் 75 பொட்டை கோழி இருக்கும் 261 நாள்.
12 மாதம
பொட்டை 75*2கிலோ*300₹= 45000
சேவல் 10*700₹= 7000
75 கோழி 4 மாதம 2250 முட்டை இடும். 75கோழி (4:1) 19 முட்டை விடும்.
75/4=19முட்டை 1 நாள்.
19முட்டை*120 நாள= 2250. 2220*10ரூபாய்=22200₹
45000+7000+22200=742200.₹
இதில் அசையா சொத்து குறிப்பிடவில்லை. உணவு செவவிடும் தொகை குறிப்பிடவில்லை .ரேசன் zபொருள்.,அசோலா, கரையான்,புல் இவற்றை கொண்டு வளர்க்கலாம்.தடூப்பூசீ 700₹
1000 முதலீடூ 74200.மாற்ற முடியும் ஒரு வருடம் முடிவில்.அதவாது 7420% இலாபம்.
இது சாத்தியமா. முடியும் என்று களத்தில் குதிதத்து உள்ளோன்.
முட்டையின் விலை நாளுக்கு நாள் வித்தியாசம் ஆகும் ..

#TkpFarms
#Iniyan
www.nattukozhifarms.in
www.facebook.com/tk.pannai
#nattu kozhi valarpu

#nattukozhivalarputamilnadu

குடற்புழு நீக்கம் செய்தல்

குடற்புழு நீக்கம் செய்தல்
ஆர்டுபி / ஆர்டிவிகே தடுப்பு மருந்து கொடுப்பதற்கு ஒரு வாரம் முன்பிருந்தே குடற்புழு நீக்க மருந்து அளிக்கவேண்டும். பின்பு 3 வார இடைவெளியில் 18வது வாரத்தில் 4 முறை குடற்புழு நீக்க மருந்து கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். உருளைப் புழுக்களுக்கு எதிராக பைப்பரசின் பொருட்கள், ஆல்பென்ஸோல், மெபென்ட்சோல் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். அதே போல் நிக்ளோசமைடு, பிராசிகுவின்டால், ஆல்பென்டசோல் போன்றவை நாடாப்புழுக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றன.
குடற்புழு மருந்தை குடிநீர் வழியே கொடுக்கும் போது குறிப்பிட்ட அளவு மருந்தை குஞ்சுகள் 4 மணி நேரத்தில் குடிக்கும் நீர் அளவில் கலந்து கொடுக்கலாம். அதாவது 6 வார வயதுள்ள 100 குஞ்சுகளுக்கு ஒரு நாளைக்கு 6 லிட்டர் நீரில் கலந்து வைக்கலாம். மருந்து கலந்த நீரை முற்றிலுமாகக் கோழிகள் அருந்திய பிறகே மீண்டும் நீர் வைக்கவேண்டும்.

#TkpFarms
#Iniyan
www.nattukozhifarms.in
www.facebook.com/tk.pannai
#nattu kozhi valarpu
#nattukozhivalarputamilnadu


நாட்டுகோழிகளின் நோய்த்தடுப்பு மேலாண்மை

நாட்டுகோழிகளின் நோய்த்தடுப்பு மேலாண்மை
1) இராணிகெட் நோய் (வெள்ளை கழிச்சல்)
2) அம்மை நோய்
3) கோழி காலரா
4) சளி நோய்
5) ரத்த கழிச்சல் மற்றும் மஞ்சள் – ஈரல் நோய்
6) தலை வீக்க நோய்
7) ஒட்டுண்ணி பாதிப்புக்கள்

கோழிகளை தாக்கும் நோய்களில் வெள்ளை கழிச்சல் நோய் மிகவும் முக்கியமானது.இந்த நோய் கோழிகளை கோடை கால மற்றும் குளிர்கால பருவ மாற்றத்தின்போது அதிகமாக பாதிக்கும் இதை கொக்கு நோய் என்றும் கூறலாம். இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகளின் குடலும் நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும்.இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகள் தீவனம் எடுக்காது தண்ணீர் குடிக்காது வெள்ளையாகவும் பச்சையாகவும் கழியும் எச்சம் இடும் பொது ஒரு காலை தூக்கிகொல்லும் ஒரு இறக்கை மட்டும் செயல் இழந்து தொங்கும் தலையை முறுக்கி கொள்ளும் இறந்த கோழிகளை பரிசோதனை செய்து பார்த்தால் இரைப்பையில் ரத்த கசிவு இருக்கும். வெள்ளை கழிச்சல் நோய் வராமல் தடுக்க தடுப்பூசி அவசியம் போட வேண்டும்
கோழி அம்மை நோய் இந்த நோய் பாதித்த கோழிகளில் முதலில் சிறு சிறு அம்மை கொப்புளங்கள் கண் கொண்டை நாசிபகுதி செவி மடல் போன்ற இடங்களில் காணபடுகிறது .பின்பு கொப்புளங்கள் ஏற்பட்ட இடங்களில் வடுக்கள் தென்படும். வாய் மற்றும் தொண்டை பகுதிகளில் புண்கள் ஏற்படுவதால் தீவனம் உற்கொள்ள முடியாமல் கோழி இறப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.இந்நோயை ஆறு வார வயதில் கோழி அம்மை தடுப்பு ஊசி போட்டு கட்டுபடுத்தலாம்.
7 வது நாள் முட்டைக் கோழிகள் ஆர் டி வி எப் 1 என்னும் இராணிகெட் நோய் தடுப்பு மருந்தினை கண்ணில் மற்றும் மூக்கில் 2 சொட்டுகள் கொடுக்க வேண்டும்
14 வது நாள் ஐ பி டி தடுப்பு மருந்தை கண் சொட்டு மருந்தாக கொடுக்க வேண்டும்
3- வது வாரம் லசோட்டா என்னும் இராணிகெட் நோய் நோய் தடுப்பு மருந்தினை கண் சொட்டு மருந்தாக உபயோகிக்க வேண்டும்
5- வது வாரம் மீண்டும் லசோட்டா மருந்தினை கொடுக்க வேண்டும் 6- வது வாரம் கோழி அம்மை தடுப்பூசி இறக்கையில் தோலுக்கு அடியில்(0.5 மில்லி) செலுத்த வேண்டும்
8- வது வாரம் ஆர் டி வி கே / ஆர் பி என்னும் நோய் இராணிகெட் நோய் தடுப்பூசியை இறக்கையில் தோலுக்கு அடியில் மில்லி செலுத்த வேண்டும்
18- வது வாரம் இராணிகெட் நோய் (ஆர் டி வி கே) நோய்க்கான தடுப்பூசியை மீண்டும் செலுத்த வேண்டும்
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குடி தண்ணிரில் லசோட்டா மருந்தினை கலந்து வைக்க வேண்டும். லசோட்டா கொடுப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் குடற்புழு நீக்கம் செய்தல் வேண்டும் .
குறிப்பு:
தீவனம் அல்லது தண்ணீரில் வைட்டமின் கலவை மருந்துடன் சிறிது சுன்னாம்புதூள் கலந்து கொடுப்பதன் மூலம், முட்டைகளின் எண்ணிக்கைகளை அதிகரிப்பதுடன், தோல் முட்டை இடுவதையும் தடுக்கலாம்.

#TkpFarms
#Iniyan
www.nattukozhifarms.in
www.facebook.com/tk.pannai
#nattu kozhi valarpu
#nattukozhivalarputamilnadu

முயல் வளர்ப்பு பற்றி கேட்ட நண்பர்களுக்காக ..

முயல் வளர்ப்பு பற்றி கேட்ட நண்பர்களுக்காக ..
முயல் வளர்ப்பு...முழுமையாக முயற்சித்தால் முத்தான வருமானம் !
இறைச்சிக்கான கால்நடை வளர்ப்புத் தொழிலில் இறங்கி, கையைச் சுட்டுக் கொண்டவர்கள் பலர் உண்டு. குறிப்பாக, முயல் வளர்ப்பில் இறங்கிய பல விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்ததால், முயல் வளர்ப்பு என்றாலே பலரும், 'வேண்டாம்’ என்றுதான் துள்ளி ஓடுவார்கள் முயலைவிட வேகமாக! ஆனால், இவர்களுக்கு மத்தியில் மிகுந்த முனைப்புடன் முயல் வளர்த்து, அதில் நல்ல லாபமும் ஈட்டி வருகிறார், விழுப்புரம் மாவட்டம், வித்யா நகரைச் சேர்ந்த முரளிதரன்.

பசுமை நிறைந்த மரங்கள் சூழ்ந்திருந்த முயல் பண்ணையில், கூண்டுகளுக்குள் முயல்கள் ஓடித்திரிந்து கொண்டிருந்தன. அந்த ரம்மியமான சூழலில் பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த முரளிதரனைச் சந்தித்தோம்.
''எங்கப்பா 'லேப் டெக்னீசியன்’ வேலை பார்த்தாலும்... விவசாயத்தை விடாம செய்துகிட்டிருந்தார். விவசாயத்துல சம்பாதிச்ச பணத்துலதான், 'இன்ஜினீயரிங்’ படிக்க வெச்சார். படிப்பை முடிச்சுட்டு, ஸ்ரீ ஹரிகோட்டாவுல இருக்குற 'இஸ்ரோ’ நிறுவனத்துல... விஞ்ஞானியா 16 வருஷம் வேலை பார்த்தேன். பிறகு, சவுதி அரேபியாவுல ஏழு வருஷம் வேலை பார்த்தேன். அதன் பிறகு, இந்தியாவுக்கே திரும்பிட்டேன். மூணு வருஷமா ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்திட்டு வர்றேன். அது மூலமா, கல்வராயன் மலையில இருக்குற மலைவாழ் மக்களுக்கு, சில உதவிகளைச் செஞ்சுக்கிட்டிருக்கோம்.
இதுக்கு நடுவுல இணையதளம் மூலமா முயல் வளர்ப்பைப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டேன். அதுக்காக, கொடைக்கானல்ல இருக்குற மத்திய செம்மறி ஆடுகள் மற்றும் ரோம ஆராய்ச்சி மையத்துல பயிற்சி எடுத்துக்கிட்டேன். ஆரம்பத்துல, 10 முயல்களை வாங்கி வளர்க்க ஆரம்பிச்சேன். மூணு வருஷத்துல
1,500 முயல்கள் கிடைச்சுது. அதுல ஆயிரம் முயலை வித்துட்டேன். இப்போ 500 முயல்களை வெச்சுருக்கேன்'' என்று முன்னுரை கொடுத்த முரளிதரன், தொடர்ந்தார்.
இன விருத்தி அதிகம்!
''சாப்பிடுற உணவை, கறியா மாத்துற திறனும், இன விருத்தியும்... மத்த விலங்குகளைவிட முயலுக்கு அதிகம். முயலை நம்ம வசதியைப் பொருத்து, எந்த இடத்துல வேணும்னாலும் வளக்கலாம். நான் என்னோட வீட்டைச் சுத்திக் கூண்டு வெச்சு வளக்குறேன். முயல் கறி, சாப்பிட்ட உடனே ஜீரணமாயிடும். இந்தக் கறியில கம்மியான கொழுப்பு, அதிக புரதம், குறைஞ்ச கலோரிதான் இருக்கு. முயல் கறி மிருதுவா, சுவையா இருக்கறதால குழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் எல்லோருமே சாப்பிடலாம். இவ்ளோ இருந்தும், யாரும் இந்தத் தொழிலுக்கு வர்றதில்லைன்றதுதான் ஆச்சரியம்.
'இதை விக்க முடியாது’னுதான் நிறைய பேர் காரணம் சொல்றாங்க. என்னோட அனுபவத்துல விற்பனை ஒரு பிரச்னையே இல்லை. தமிழ்நாட்டுல போதுமான அளவுக்கு முயல் இல்லை. எந்தப் புதுப்பொருளா இருந்தாலும் அதைச் சாப்பிட்டு ருசி கண்டாத்தான்... அடுத்தடுத்து சாப்பிடத்தோணும். நம்ம ஊர்ல ஆட்டுக்கறி, கோழிக்கறி கிடைக்கிற அளவுக்கு முயல் கறி கிடைக்கறதில்லை. அதனால மக்கள் வாங்கி சாப்பிடுறதில்லை. அதில்லாம, முயல் மென்மையான, சாதுவான பிராணி. அதனால, அதைக் கொன்னு சாப்பிடுறது பாவம்ங்கிற எண்ணமும் இருக்கு. அதனாலதான் பயன்பாடு கம்மியா இருக்கு.
விழுப்புரத்துல ஒரு ஹோட்டல்ல நான் ஆர்டர் கேட்டப்ப, 'தினம் 5 முயல் உங்களால கொடுக்க முடிஞ்சா நாங்க முயல்கறி பிரியாணி போடத் தயார்’னு சொன்னாங்க. ஆனா, அந்தளவுக்கு என்னால கொடுக்க முடியாதுங்றதுதான் உண்மை.
விற்பனைக்கு உதவி செய்வேன்!
வளர்ப்புக்கு, இனப்பெருக்கத்துக்கு, சோதனைக் கூடங்களுக்கு, கறிக்குனு பலவகையிலும் முயல்களுக்குத் தேவை இருந்துக்கிட்டுத்தான் இருக்கு. என்கிட்ட இருக்குற ஆர்டருக்கே என்னால் சப்ளை செய்ய முடியல. முயல் வளத்துக்கிட்டு இருக்கறவங்களுக்குத் தேவையான ஆலோசனை கொடுக்கவும், விற்பனை செய்து கொடுக்கவும் நான் தயாராக இருக்கேன்'' என்று அனுபவப் பாடத்தை முடித்த முரளிதரன், வளர்ப்புப் பாடத்தை ஆரம்பித்தார்.
மூன்று மாதங்களில் 3 கிலோ!
முயலின் ஆயுட்காலம் 12 ஆண்டுகள். இன விருத்திக்காக வளர்க்கும்போது, 5 ஆண்டுகள் வரை வளர்ப்பதுதான் சிறந்தது. வெள்ளை ஜெயன்ட், சாம்பல் ஜெயன்ட், சோவியத் சின்சிலா, நியூசிலாந்து வெள்ளை ஆகிய ரகங்கள் வளர்ப்புக்கு ஏற்றவை. இவை மூன்று மாதங்களில் 2 கிலோ முதல், 3 கிலோ அளவுக்கு வளரக் கூடியவை.
வலை கவனம்!
கொட்டகைக்கு அதிகச் செலவு செய்யாமல், வீட்டைச் சுற்றி நிழலுள்ள இடங்களில் கூண்டுகளை அமைத்து முயல் வளர்க்கலாம். ஒரு முயலுக்கு நான்கு சதுரடி இடம் தேவை.
அதாவது, இரண்டடிக்கு இரண்டடி என்ற அளவில் கூண்டு இருக்க வேண்டும். தனித்தனியாக கூண்டு செய்யாமல், பத்தடி நீளம், நான்கடி அகலம், ஒன்றரை அடி உயரத்தில் ஒரே கூண்டை செய்து, அதை இரண்டு இரண்டு அடியாகப் பிரித்துக் கொண்டால்... செலவு குறையும். இது வளரும் முயல்களுக்கான கூண்டு.
குட்டி ஈனும் முயலுக்கு... இரண்டரை அடி சதுரம், ஒன்றரை அடி உயரத்தில் இதேபோல கூண்டுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். கூண்டுக்கு 14 'கேஜ்’ கம்பிகளைப் பயன்படுத்தினால், முயலுக்குக் காலில் புண்கள் உண்டாகாது. அதேபோல தண்ணீருக்கு 'நிப்பில்’ அமைப்பை அமைத்து விட்டால்... தண்ணீர் வீணாகாது.
ஒரு யூனிட்டுக்கு 10 முயல்!
சினை முயல் ஒன்று, பருவத்துக்கு வந்த இரண்டு பெட்டை முயல்கள் (4 மாதம் வயதுடையவை ), 6 மாத வயதுடைய ஒரு ஆண், ஒரு கிலோ அளவுடைய இரண்டு ஆண் முயல்கள், நான்கு பெட்டைக் குட்டிகள் என ஏழு பெண் முயல்கள், மூன்று ஆண் முயல்கள் என பத்து முயல்களைக் கொண்டது ஒரு யூனிட். முயல் வளர்ப்பில் இறங்குபவர்கள், ஒரே வயதுடைய முயல்களை வாங்கி வளர்க்கும்போது, வளர்ப்பு நிலை தெரியாமல் கஷ்டப்படுகிறார்கள். இந்த முறையில் வளர்க்கும்போது, 3 மாதங்களில் அனைத்து நிலைகளையும் கடந்து விடலாம். ஒரு யூனிட் முயல்களை, ஒரு கூண்டுக்கு ஒரு முயல் எனத் தனித்தனியாக விட்டுவிட வேண்டும்.
15 நாட்களுக்கு ஒரு முறை பருவம்!
முயல், ஐந்து மாத வயதில் பருவத்துக்கு வரும். பெண் முயலின் பிறப்புறுப்பு சிவந்து தடித்திருப்பதைப் பார்த்து பருவமடைந்ததைக் கண்டுபிடித்து விடலாம். அதன் பிறகு, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து பருவத்துக்கு வரும். பருவம் வந்த பெண் முயலை, ஆண் முயல் இருக்கும் கூண்டுக்குள் விட வேண்டும். விட்ட ஓரிரு நிமிடங்களில் இனச்சேர்க்கை நடந்து விடும். பிறகு, பெண் முயலை அதனுடைய கூண்டில் விட்டுவிட வேண்டும். இன விருத்திக்காக ஆணுடன், பெட்டையைச் சேர்க்கும்போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முயல்களாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், மரபு ரீதியான குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
ஆணுடன் சேர்த்த 15 நாட்கள் கழித்து, பெண் முயலின் அடி வயிற்றைத் தடவிப் பார்த்தால் குட்டி தென்படும். உடனே, சினை முயலுக்கான கூண்டுக்கு மாற்றிவிட வேண்டும். குட்டி உருவாகவில்லையெனில், மீண்டும் அடுத்த பருவத்தில் இனச்சேர்க்கை செய்ய வேண்டும்.
ஆண்டுக்கு 8 முறை குட்டி!
குட்டி ஈனும் கூண்டில் தனிப்பெட்டி வைத்து, அவற்றில் தேங்காய் நார் கழிவுகளை வைக்க வேண்டும். முயலின் சினைக்காலம் முப்பது நாட்கள். ஆண்டுக்கு 6 முதல் 8 முறை குட்டி ஈனும். குட்டி ஈன்ற உடனே அடுத்த சினைக்குத் தயாராகிவிடும். அடுத்தப் பருவத்திலேயே மீண்டும் இனச்சேர்க்கை செய்யலாம். முதல் ஈற்றில் மூன்று குட்டிகள் வரைதான் கிடைக்கும்.
அடுத்தடுத்து குட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்து, ஒரு ஈற்றில் 5 முதல் 9 குட்டிகள் வரை கிடைக்கும். பிறந்த குட்டியின் எடை 60 கிராம் இருக்கும்.
குட்டிகள் ஒரு மாதம் வரை தாயிடம் பால் குடிக்கும். அதன் பிறகு குட்டிகளைப் பிரித்துவிட வேண்டும். முதலில் தாய் முயலைப் பிரித்து விட்டு, ஐந்து நாட்கள் கழித்து குட்டிகளை இடம் மாற்ற வேண்டும். பால் குடிக்கும் பருவத்தில் ஒரு குட்டி 750 கிராம் அளவுக்கு வந்துவிடும். தொடர்ந்து தீவனம் கொடுத்து வரும்போது, நான்கு மாதங்களில் இரண்டு கிலோ அளவுக்கு எடை வந்துவிடும்.
பசுந்தீவனமாக தட்டைச்சோளம்!
முயலுக்கு அருகம்புல், வேலிமசால், அகத்தி, மல்பெரி இலைகள், தட்டைச்சோளம் ஆகியவற்றைப் பசுந்தீவனமாகக் கொடுத்து வளர்க்கலாம். அடர் தீவனமாக கடையில் கிடைக்கும் தீவனங்கள் விலை அதிகமாகவும், தரமில்லாமலும் இருக்கின்றன. அதனால், நாமே அடர் தீவனத்தைத் தயாரித்துக் கொள்ளலாம்.
பருவமடைந்த முயல் ஒன்றுக்கு தினமும் 250 கிராம் பசுந்தீவனமும், 100 கிராம் அடர் தீவனமும் கொடுக்க வேண்டும். குட்டி ஈன்ற முயலுக்குத் தினமும் 150 கிராம் அடர் தீவனமும், 250 கிராம் பசுந்தீவனமும் கொடுக்க வேண்டும். குட்டிகளுக்கு 50 கிராம் அடர் தீவனமும், 100 கிராம் பசுந்தீவனமும் கொடுக்க வேண்டும். முயல்கள் பகல்வேளையில் தூங்கும் பழக்கம் கொண்டவை. அதனால், காலை ஏழு மணிக்கு மொத்தத் தீவனத்தில் கால் பங்கு; இரவு ஏழு மணிக்கு முக்கால் பங்கு என பிரித்துக் கொடுக்க வேண்டும்'' வளர்ப்புப் பாடத்தை முடித்த முரளிதரன், நிறைவாக வருமானம் பற்றிச் சொன்னார்.
ஆண்டுக்கு 210 முயல்கள்!
''ஒவ்வொரு முயலும் சராசரியாக வருஷத்துக்கு ஆறு முறை குட்டி போடும். ஒவ்வொரு முறையும் சராசரியா 5 குட்டினு வெச்சுக்கிட்டா, ஒரு யூனிட்ல இருக்கற ஏழு பெண் முயல்கள் மூலமா...வருஷத்துக்கு 210 குட்டிகள் கிடைக்கும். நாலு மாசம் கழிச்சு விக்கும்போது, ஒரு முயல் சராசரியா ரெண்டு கிலோ இருக்கும். சராசரியா ஒரு கிலோவுக்கு 175 ரூபாய் விலை கிடைக்குது. ஒரு முயல் 350 ரூபாய்னு 210 முயல்களையும் விக்கிறப்போ...
73 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல, தீவனம், மருத்துவச் செலவு, பராமரிப்புக்கு 52 ஆயிரத்து 800 ரூபாய் போக 20 ஆயிரத்து 700 ரூபாய் லாபம்.
இது, பத்து முயல்கள் அடங்கிய ஒரு யூனிட்டுக்கான கணக்கு. ஆடு கோழி வளர்ப்பைவிட இதுல லாபம் குறைவா இருக்குறது போல தோணலாம். ஆனா, இதுல பராமரிப்பு குறைவு. அதாவது, இதுக்காக நீங்க செலவிடற நேரம் ரொம்பவே குறைவாத்தான் இருக்கும். பகுதி நேர வேலையாவே இதைச் செய்யலாம். அதேபோல நோய் தாக்குதலும் அதிகம் இருக்காது.
5 யூனிட்டா... அதாவது 50 முயல்களைக் கொண்டு பண்ணையைத் தொடங்கினா, வருஷத்துக்கு 1 லட்ச ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்கும். சினை முயலா வித்தோம்னா, ஒரு முயல் 600 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரை விற்பனை ஆகும். சோதனைக் கூடங்களுக்கு வித்தா, ஒரு முயலை 1,500 ரூபாய் வரைக்கும்கூட விக்க முடியும்'' என்றார், மகிழ்ச்சியாக!
உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும்!
முயல் வளர்ப்பு பற்றி பேசும், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தின் இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் குமரவேல், ''தமிழ்நாட்டில் ஒரு அழகுப் பிராணியாகத்தான் முயலைப் பார்க்கிறார்கள். சென்னை, செங்கல்பட்டு போன்ற நகரங்களிலும், பெரிய ஹோட்டல்களிலும் முயல் கறிக்கான தேவை இருக்கிறது. ஆனால், உற்பத்திதான் இல்லை. எல்லோரும் தற்பொழுது இன விருத்திக்கான முயலை விற்பனை செய்வதில்தான் கவனம் செலுத்துகின்றனர். கறிக்கான முயல் வளர்ப்பு செய்தால், விற்பனை வாய்ப்பை அதிகப்படுத்தலாம். எங்கள் மையத்தில் இதற்கான பயிற்சிகளைக் கொடுத்து வருகிறோம். மேலும், இனவிருத்திக்கான முயலை 200 ரூபாய் வீதம் விற்பனை செய்து வருகிறோம்'' என்று சொல்கிறார்.
இப்படித்தான் அடர் தீவனம் தயாரிக்கணும்!
மக்காச்சோளம்-20 கிலோ, கம்பு-15 கிலோ, கேழ்வரகு-3 கிலோ, அரிசி-15 கிலோ, கோதுமை தவிடு-12 கிலோ, கடலைப்பொட்டு-20 கிலோ, தாது உப்பு- ஒன்றரை கிலோ, உப்பு- அரை கிலோ ஆகியவற்றை கலந்து அரைத்துக் கொள்ள வேண்டும். தீவனம் வைப்பதற்கு 12 மணி நேரம் முன்பு 13 கிலோ கடலைப் பிண்ணாக்கை ஊறவைத்து, இக்கலவையுடன் கலந்து முயல்களுக்குக் கொடுக்க வேண்டும். இது 100 கிலோ தீவனம் தயாரிப்பதற்கான உதாரண அளவு. எவ்வளவு முயல் இருகின்றனவோ... அதற்கு ஏற்ற அளவில் தீவனத்தைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.
முயல் கறியில் உள்ள சத்துகள்!
புரதம்-21%, கொழுப்பு-11%, நீர்ச்சத்து 68%. 100 கிராம் கறியில்... 50 மில்லி கிராம் கொழுப்புச் சத்து, 20 மில்லி கிராம் சுண்ணாம்புச் சத்து 40 மில்லி கிராம் சோடியம், 350 மில்லி கிராம் பாஸ்பரஸ் சத்து ஆகியவை இருக்கின்றன.
விளம்பரத்தை நம்பாதீர்கள்!
கொடைக்கானலில் இயங்கிக் கொண்டிருக்கும் மத்திய செம்மறி ஆடுகள் மற்றும் உரோம ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானியான ராஜேந்திரன் முயல் வளர்ப்பு பற்றி சில தகவல்களை இங்கு சொல்கிறார்.
''இப்போ, முயல் வளக்க ஆசைப்படுறவங்க, தனியார் நிறுவனங்களோட விளம்பரங்களை நம்பி... 10 முயல்கள் கொண்ட யூனிட்டை... 20 ஆயிரம், 30 ஆயிரம் ரூபாய்னு வாங்குறாங்க. ஆனா, 10 முயல், கூண்டு எல்லாம் சேர்த்தே அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாய்தான் இருக்கும். இதுமாதிரியான ஏமாற்று வேலைகளை நம்பாதீங்க.
முயல் வளர்ப்பு லாபகரமான தொழில்தான். விற்பனைக்காக மற்றவர்களை சார்ந்திருக்காம நேரடியா கறி விற்பனையில் இறங்கறது நல்லது. கேரளா மாநிலத்துல அரசுத் துறைகள் மூலமாவே முயல் வளர்த்து, மக்களுக்கு இனவிருத்தி முயலா கொடுக்கிறாங்க. நம்ம மாநிலத்துலயும் இதேமாதிரி கொடுத்து, பயிற்சிகளையும் கொடுத்தா, ஏமாற்றும் நிறுவனங்கள்கிட்ட இருந்து மக்களைக் காப்பாத்தலாம். முயல் உற்பத்தியையும் அதிகரிக்கலாம்'' என்று அருமையான தகவல்களைத் தந்த ராஜேந்திரன்,
''முயல் வளர்ப்பு பத்தின ஆலோசனைகளுக்கு, எங்கள் மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்'' என்றும் அழைப்பு வைத்தார்!
தொடர்புக்கு,
முரளிதரன், செல்போன்: 94431-82960,
செம்மறி ஆடுகள் மற்றும்
ரோம ஆராய்ச்சி மையம்,
கொடைக்கானல்,
தொலைபேசி: 04542-276414.
வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம்.
தொலைபேசி: 044-27452371.


#TkpFarms
#Iniyan
www.nattukozhifarms.in
www.facebook.com/tk.pannai
#nattu kozhi valarpu
#nattukozhivalarputamilnadu

லட்ச ரூபாய்க்கு விற்பனையாகும் சண்டை சேவல்!

லட்ச ரூபாய்க்கு விற்பனையாகும் சண்டை சேவல்!
'அதிகாலையில் சேவலை எழுப்பி அதை கூவென்று சொல்லுகிறேன்...', 'கொக்கரக்கோ கொக்கரக்கோ சேவலே...' இப்படியாக நம் வாழ்வோடு தொன்று தொட்டு இணைந்திருக்கிறது சேவற்கோழிகள்.
வீட்டுக்கு ஒன்று, இரண்டாக இருந்த காலம் போய் இன்று 100 கணக்கில் அவைகளை ஒரு தொழிலாகவே வளர்த்து வருகின்றனர் பலர். பண்டிகை நாட்கள் சிலவற்றை ஒட்டி நடத்தப்படும் வீர விளையாட்டான சேவல் சண்டைக்கு தேவையான சண்டைக்கோழிகளை ஆர்வமுடன் வளர்த்து ஆயிரக்கணக்கில் ஆதாயமும் பார்த்து வருகின்றனர் பலர்.
அதில் ஒருவரான ஈரோடு மாவட்டம், சிவகிரியைச் சேர்ந்த சீனிவாசன், ''ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம், கிடாமுட்டு, சேவல் சண்டைனு காலங்காலமா வீர விளையாட்டுங்க நடக்குது. பல ஊர்களில இந்த வீரவிளையாட்டுக்களை நடத்துவது மிருகவதைனு அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை விதிச்சு இருக்கு. அதையும் தாண்டி சேவல் சண்டை நடந்துக்கிட்டுத்தான் இருக்கு.
நான் கடந்த 20 வருசமா கட்டுசேவல் வளர்த்து வருகிறேன். இப்போது என்னிடம் 200 சேவல்கள் இருக்கு. தமிழ்நாடு தவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளானு அண்டை மாநில வியாபாரிகளும் பண்ணைக்கு வந்து சேவலை வாங்கிட்டுப் போறாங்க. பொறிச்ச குஞ்சுயில தரமான சேவல் குஞ்சுயை பிரிப்போம். 18 மாசம் முடிஞ்சதும் ஏற்கனவே, பல தடவை சண்டைபோட்ட சேவலோடு மோதவிட்டு இளஞ்சேவல்களுக்கு பயிற்சி கொடுப்போம். ஒரு வாரம் முடிஞ்சதும் களத்துல இறக்கணும். இதை எங்க பாஷையில. 'நடவு'னு சொல்லுவோம். நடவு சேவல் எதிர்த்து, நிற்கிற சேவலை சண்டை போட்டு ஜெயிச்சா 'அடிச்சிடுச்சு'னு சொல்லுவோம். தோத்துப்போன சேவலை 'கோச்சை'னு சொல்லுவோம்.
தோத்துப்போன சேவல் ஜெயித்த சேவலின் சொந்தக்காரருக்கு கொடுக்கப்படும். இப்படியா பல சேவல்களை அடிக்கிற சேவலுக்கு சந்தையில நல்ல கிராக்கி இருக்கும். ஒரு சேவல் 25 ஆயிரம் ரூபாய் தொடங்கி 1 லட்சம் ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கிற ஆட்களும் உண்டு. ஒன்னரை வருஷத்துல களம் இறங்கிற கட்டுசேவல்கள் காயம் படாமல் இருந்தா 7 வருஷம் வரை சண்டை போட வைக்கலாம். அதே சமயம், எடை கூடாமலும் பார்த்துக்கணும். கட்டு சேவல் எடை மூணரை கிலோவுக்கும் மேல போகக்கூடாது.
சண்டை சேவலை வெளியில மேய விடமாட்டோம். அதுங்க எப்பவும் ஆக்ரோஷமாகவே இருக்கும். அதனால அடுத்த சேவல்கிட்ட வம்பிழுக்கும். அதனால நிலத்துல குச்சி அடிச்ச நிழல்ல கட்டி வெச்சிருப்போம். கம்பு, ராகி, சோளம், கோதுமை போன்ற தானியத்தை தீனியா கொடுக்கிறோம்'' என்றவர் கட்டுசேவல் வளர்ப்போர் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றினையும் வைத்தார்.
''பாரம்பரியம் மிக்க வீர விளையாட்டுல, சேவல் சண்டையும் ஒண்ணு. கரூர் அடுத்து இருக்கிற கோவிலூரில் சேவல் சண்டை நடத்திட அனுமதியும், விதியும் உள்ள செப்புப்பட்டயம் இருக்கு. அதனால, அரசாங்கம் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு சேவல் சண்டை நடத்த அனுமதி கொடுக்கவேண்டும். இதனால, சண்டை சேவல் இனம் அழியாம இருக்கும்'' என்றார்.
அடுத்து நம்மிடம் பேசிய பொன்னாபுரம் சுரேஷ் ''என்னோட பண்ணையில நாட்டு சேவல் 1000 இருக்கு. சண்டைச் சேவலை சுழி, நிறம், வடிவம் எல்லாம் பார்த்துதான் வாங்குவாங்க. அது திருப்தியா அமையணும். அந்த ‘பட்சி சாஸ்திரம்’ தெரிஞ்சவங்கள கூட்டிபோய் காட்டித்தான் வாங்குவாங்க. பொன்னிறம், காகம், வல்லூறு, மயில், ஆண்டக்கீரி, பச்சைக்கால் வெள்ளை, பொன்னிறக்கால் வெள்ளை, ஆந்தை வல்லூறு, சுத்தக்கருப்பு, செங்கருப்பு, கருங்கீரினு பலவகை உண்டு'' என்றார்


#TkpFarms
#Iniyan
www.nattukozhifarms.in
www.facebook.com/tk.pannai
#nattu kozhi valarpu

#nattukozhivalarputamilnadu

கால்நடை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்களின் தொலைபேசி

கால்நடை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்களின் தொலைபேசி:
தமிழ்நாடு மாவட்ட கால்நடை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்களின் தொலைபேசி எண்களை பதிவு செய்துள்ளேன்..இவற்றை தாங்கள் தொடர்பு கொண்டு கால்நடைகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற்று பயன் அடையுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்..வாழ்த்துக்கள்...
1)கோவை-0422-2669965
2)தருமபுரி-04342-292525
3)திண்டுக்கல்-0451-2423147
4)ஈரோடு-0424-2291482
5)வேலூர்-0416-2225935
6)கடலூர்-04142-220049
7)திருச்சி-0431-2770715
8)கரூர்-04324-294335
9)மேல்மருவத்தூர்-044-27529548
10)மதுரை-0452-2483903
11)புதுக்கோட்டை-04322-271443
12)சேலம்-0427-2440408
13)திருப்பூர்-0421-2248524
14)தஞ்சாவூர்-04362-255462
15)ராஜபாளையம்-04563-220244
16)திருநெல்வேலி-0462-2337309
17)நாகர்கோவில்-04652-286843



#TkpFarms
#Iniyan
www.nattukozhifarms.in
www.facebook.com/tk.pannai
#nattu kozhi valarpu

#nattukozhivalarputamilnadu

புதிதாக பண்ணை ஆரம்பிக்கிறேன் ? லாபம் கிடைக்குமா? நஷ்டம் வருமா?

புதிதாக பண்ணை ஆரம்பிக்கிறேன் ? லாபம் கிடைக்குமா? நஷ்டம் வருமா? பண்ணை தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்களின் மனதில் ஓடும் எண்ணற்ற கேள்விகளில் முதல் கேள்வி இதுவாகத்தான் இருக்கும்..
அனுபவத்தோடு ஆரம்பித்தால் லாபம், அனுபவம் இல்லை எனில் ஆரம்பத்தில் சிறு தடுமாற்றம் வரலாம் ஏன் சிறிது நஷ்டமும் அடையலாம் , அதை நஷ்டம் என கருதாமல் தொழில் கற்க வாய்ப்பாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து செய்தால் லாபம் பெறலாம், நம்மில் பெரும்பாலானோர் பண்ணை தொடங்கும்முன் இருக்கும் ஆர்வம், அதை நடத்தும்போது இருபதில்லை, பலர் உடனே பலன் எதிர்பார்த்து ஏமாறுவதும், பலன் இல்லை என்று பண்ணை தொழிலை விட்டு விலகுவதும் அதிகம் பார்க்கமுடிகிறது, அதற்க்கு காரணம் ஆர்வத்தோடு கூடிய அனுபவம் இல்லாமை
எந்த பண்ணை அமைத்தாலும்(ஆடு,கோழி,முயல்,வாத்து) முதலில் அதற்கான விற்பனை / சந்தைபடுத்தலை தெரிந்து கொள்ளுங்கள், எங்கு விற்றால் எவளோ லாபம் கிடைக்கும் என கணக்கீடை தெரிந்துகொள்ளுங்கள்
இதே பொருளை அவர்கள் அவளுவுக்கு விற்கிறார்கள், இவளுவுக்கு விற்கிறார்கள் என ஒப்பீடு செய்யாமல், உங்கள் பொருளுக்கு நீங்களே லாபத்துடன் கூடிய விலை நிர்ணயம் செய்யலாம்
தொழில் செய்ய ஆரம்பித்து விட்டால் அதை முழு மனதுடன், தொழிலுக்கான நேரத்தில் தொழில் செயுங்கள், அப்புறம் செய்யலாம் என ஓய்வு நேரத்தில் செய்தால் நஷ்டம்தான் ஏற்படும்
பண்ணை அமைக்கும்போது அதற்கென்று ஒரு இடத்தை ஒதுக்கி, சுத்தியும் வேலி அமைப்பது நன்று, கோழி பண்ணை என்றால், வேறு கோழி பண்ணையில் வேலை செய்தவர்களை அனுமதிக்க கூடாது, ஏன் எனில் அந்த பண்ணையில் இருக்கும் கிருமிகள் நம் பண்ணை கோழிகளை விரைவாக தாக்கும்
பண்ணையில் இருக்கும் ஆடு, கோழிகளுக்கு ஒரே மாதிரியான நீரை கொடுப்பது நல்லது, ஒரு நாள் போறேவெல் நீர், அடுத்தநாள் கிணற்று நீர், மற்றொருநாள் பன்சாயாத்து/ corporation தண்ணி என கிடைத்த நீரை கொடுக்க கூடாது, இவ்வாறு செய்வதால் சளி தொல்லை அதிகமாகவும், விரைவாகவும் கோழி மற்றும் ஆடுகளை தாக்கும்
பண்ணை தொழிலில் முழுவதும் கூலி ஆட்களை நம்பி இராமல், நாமளும் செய்யவேண்டும், குறைந்த பட்சம் வேலை நடக்கும்போது நாம் இருக்க வேண்டும்
இதுபோல எவளவோ காரணிகள் பண்ணை தொழில் உள்ளன, அவற்றை எல்லாம் பண்ணை ஆரம்பிக்குபோது தெறித்து கொண்டு, புரியதுலடன் செய்தால் லாபம்தான்
வாழ்த்துக்கள்


#TkpFarms
#Iniyan
www.nattukozhifarms.in
www.facebook.com/tk.pannai
#nattu kozhi valarpu

#nattukozhivalarputamilnadu

கோழிகளில் நோயைக் கட்டுப்படுத்த வழிமுறைகள்


ஆயிரக்கணக்கில் கோழிகளை ஒரே இடத்தில் வளர்க்கும் போது நோய் எளிதில் பரவ வாய்ப்புள்ளது. எனவே ஒரு இலாபகரமான கோழிப்பண்ணைக்கு திட்டமிட்ட நோய்க் கட்டுப்பாடு முறை இன்றியமையாததாகிறது. அதற்கு கீழ்க்கண்ட வழிமுறைகள் உதவுகின்றன.
■ஒரு புதிய கோழிகளை கொட்டகையினுள் விடுவதற்கு இரு வாரங்களுக்கு முன்பே கொட்டகையை சுத்தம் செய்து வைக்கவேண்டும்.
■பழைய கோழியின் எச்சங்களை கூடிய சீக்கிரம் அகற்றிவிடவேண்டும். சுவர், மேல்கூரை போன்றவைகளையும் அவ்வப்போது சுத்தப்படுத்தவேண்டும்.
■ஒரு நல்லக் கிருமி நாசினிக் கொண்டு இவையனைத்தையும் சுத்தம் செய்தல் வேண்டும்.
■பயன்படுத்தும் அனைத்துக் கருவிகளையும் கிருமி நாசினிக் கொண்டு சுத்தம் செய்து உலர வைத்த பின்பே உபயோகிக்கவேண்டும்.
■ஒளி எதிரொளிப்பான் மற்றும் வளி உமிழும் விளக்குகளை அவ்வப்போது கண்காணித்துக் கொள்ளவேண்டும். பயனற்ற விளக்குகளை அகற்றி புதிய விளக்குகளைப் பொருத்தவேண்டும்.
■எலி, நாய், பூனை போன்ற விலங்குகளை பண்ணைக்கருகே அண்ட விடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
■பார்வையாளர்களை அதிகம் உள்ளே வராமல் தடுப்பது நன்று.
■இறந்து போன கோழிகளை உடனே தொலைவில் கொண்டு சென்று புதைத்து விடுதல் வேண்டும்ட.
■1 சதவிகிதம் அம்மோனியாக் கரைசல் கொண்டு நீர் மற்றும் தீவனத் தொட்டிகளைத் தினமும் சுத்தப்படுத்த வேண்டும்.
■உள்ளே செல்லும் பாதை அமைப்புகளை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்கவேண்டும்.
■பண்ணையைச் சுற்றிலும் நல்ல சுகாதாரமான முறையைக் கடைபிடிக்கவேண்டும்.
■ஈரமானக் கூளங்களை உடனே நீக்கி புதிய கூளங்களை மாற்றவேண்டும்.
■ஒவ்வொரு நாளும் கோழிகள் ஆரோக்கியமாக இருக்கின்றனவா, இல்லை சோர்ந்து ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்படுகிறதா என்பதை தீவனமிடும்போதும் மற்றும் உள்ளே சென்று வரும் போதும் கவனிக்கவேண்டும்.
■நல்ல உற்பத்தி நேரத்திலும் மற்றும் இதர அட்டவணை நேரப்படியும் குடற்புழுநீக்க மருந்து அளிக்கவேண்டும்.
■ஏதேனும் நோய்பரவல் அல்லது தாக்கம் தெரிந்தால் உடனே தேவையான நடவடிக்கைகளை உடனே


#TkpFarms
#Iniyan
www.nattukozhifarms.in
www.facebook.com/tk.pannai
#nattu kozhi valarpu

#nattukozhivalarputamilnadu


நாட்டுக் கோழிகள் தாய்மை உணர்வு அதிகம் கொண்டவை ..


நாட்டுக் கோழிகள்
தாய்மை உணர்வு அதிகம் கொண்டவை.
எனவே தொடர்ந்து 15--20
முட்டைகளிட்டு அவற்றைஅடைகாத்து குஞ்சு பொரிக்கும்
குணம் கொண்டவை.
தாய்மார்கள்
குழந்தைகளை பராமரிப்பது போலவே நாட்டுக்கோழிகளும்
குஞ்சுகளைக் கண்ணும் கருத்துமாகப்
பாதுகாத்து வளர்க்கும். குஞ்சுகளைப்
பாதுகாப்பதற்காக பருந்து, கழுகு,
காக்கை போன்றஎதிரிகளிடமிருந்து காப்பதற்கு அவைகளைப்
பறந்து துரத்தி அடிக்கும் குணம்
கொண்டவை.
நாட்டுக்கோழி வளர்ப்பினால் கீழ்வரும்
நன்மைகள் ஏற்படுகின்றன.
1. கிராம மக்களின் நிலையான
வருமானம்
2. உறவினர்களுடன் உண்டு மகிழ
3. வேண்டுதலுக்காகப் பலியிட
4. அவசரத் தேவைக்கு செலவு செய்ய
5. விலங்கினப் புரதத்தை பூர்த்தி செய்ய
6. மிகக் குறைந்த
இடவசதி போதுமானது
7. குறைந்த முதலீடு போதுமானது.
8. எளிமையான
பராமரிப்பு சுற்றுப்புறத்தைத்
தூய்மையாக வைத்திருக்கும்
குறைந்த சுகாதாரப் பணியாளர்.
9. அதிக நோய்
எதிர்ப்பு சக்தி கொண்டது.
10. அக ஒட்டுண்ணிகளுக்கும் நோய்
எதிர்ப்பு சக்தி கொண்டது.
பெரும்பாலான கிராமங்களில்
வீட்டிற்கு குறைந்தது 10 முதல் 20
கோழிகள் வரை வளர்க்கின்றனர். பெண்கள்
அதன் மூலம் கிடைக்கும்
வருமானத்தை சிறுவாட்டுக்காசு என்றும்
சிறுசேமிப்பாகச்
சேர்த்து தேவையான
பொருட்களை வாங்கிக் கொள்கின்றனர்
நம் நாட்டில் உள்ள பெரும்பாலான
ஏழை எளிய மக்கள்
ஹைப்போ புரோட்டினிமியா என்னும்
புரதச்சத்து மிகவும் குறைந்த
உணவையே உட்கொள்கின்றனர்.
இதனால் சரியான உடல்
வளர்ச்சி இல்லாமலும்,
மூளை வளர்ச்சி இல்லாமலும் நோய்
எதிர்ப்பு சக்தி குறைந்தும்
காணப்படுகின்றனர். எனவே கிராம
மக்களுக்கு நாட்டுக் கோழிகள் மூலம்
ஓரளவு புரதச்
சத்து கிடைத்து விடுகிறது.
இது நாட்டுக் கோழியின்
சிறப்பு அம்சமாகும்.
1947ம் ஆண்டு சுதந்திரம்
பெற்றபோது நாம் உட்கொண்ட
முட்டையின் அளவு 7முதல்
10முட்டைதான் இந்தியாவில்
இன்று ஒரு நாளைக்கு 15
கோடி முட்டைகள்
உற்பத்தி செய்து முட்டை உற்பத்தியில்
இரண்டாவது இடத்தைப்
பிடித்து விட்டோம் அப்படி இருந்தும்
நாம் உட்கொள்ளும் முட்டையின்
எண்ணிக்கை 35-40 ஆக
மட்டுமே உயர்ந்துள்ளது. ஆனால் நாம்
உட்கொள்ள வேண்டிய
முட்டை ஒரு நாளைக்கு அரை முட்டை வீதம்
வருடத்திற்கு 180 முட்டைகள் சாப்பிட
வேண்டும்.
தற்போது உற்பத்தி செய்யப்படும்
முட்டைகளில் 35-40 சதவீதம்
நாட்டுக்கோழிகளில் இருந்து தான்
கிடைக்கிறது என்பதே உண்மையாகும்.
நாட்டுக் கோழிகளை வளர்பதற்கு மிகக்குறைந்த
இடவசதியேபோதுமானதுமுட்டைக்கோழிகளை வளர்ப்பதைப்போல்அதிக செலவு செய்து
கொட்டகைகள்அமைக்க வேண்டிய அவசியமில்லை.
பண்ணைகளில் வளர்க்கப்படும்
வீரியக்கோழிகளுக்கு லட்சக் கணக்கில்
முதலீடு செய்ய வேண்டியது அவசியம்.
ஆனால் ஐந்து நாட்டுக்கோழிகள்
வாங்கி அதிலிருந்தே இனப்பெருக்கம்
செய்து நல்ல வருமானம் ஈட்ட முடியும்
ஒரு கோழியிலிருந்து வருடத்திற்கு ரூ5000
வருமானம் கிடைக்கும். 10
கோழிகளை வளர்த்தாலே வருடத்திற்கு 50,000ரூபாய்
வருமானம் கிடைக்கும். கோழிப்
பண்ணைகளில் உள்ள வீரிய
இனக்கோழிகளைப் பராமரிக்க
வேலை ஆட்களை அமர்த்த
வேண்டியது அவசியம் நாட்டுக்
கோழிகளை வளர்க்க வேலை ஆட்கள்
தேவையில்லை.
வீட்டில் உள்ள பெண்களும்,
குழந்தைகளுமே போதுமானது எனவே செலவும்
குறைவாகிறது. நாட்டுக் கோழிகள்
வீட்டிற்கு வெளியில் உள்ள புழு,
பூச்சிகளைக் சாப்பிடுவதாலும், புல்
பூண்டுகளை உண்பதாலும்
சுற்றுபுறம் தூய்மையாக
இருப்பதுடன் சுகாதாரமாகவும்
இருக்கிறது. இதனால்
நாட்டுக்கோழிகள் தனக்குத்
தேவையான புரதச் சத்தையும்
நார்ச்சத்தையும்
தானே தேடிக்கொண்டு உண்பதால்
நமக்கு தீவனச் செலவு குறைவதுடன்
நாட்டுக்கோழி இறைச்சி மிருதுவாகவும்
ருசியாகவும் உள்ளது. வீரிய இனக்
கோழியின் இறைச்சி அவ்வளவாக
ருசியாக இருக்காது.
வீரிய இனக் கோழிகளுக்கு 64 நோய்கள்
தாக்குகின்றன. ஆனால் நாட்டுக்
கோழிகளுக்கு 4--5
நோய்களே ஏற்படுகின்றன. முட்டைக்
கோழிகளுக்கு 13 தடுப்பூசிகளும்,
இறைச்சிக் கோழிகளுக்கு 5
தடுப்பூசிகளும் அவசியம் போட
வேண்டும் ஆனால் நாட்டுகோழிகள்
நோய்
எதிர்ப்பு சக்தி கொண்டவை.எனவே 10-20
கோழிகள் வளர்ப்பவர்கள்
வெள்ளைக்கழிச்சல் நோய் என்னும்
இரானிக்கெட் நோய்க்கு மட்டும்
தடுப்பூசி போட்டால் போதுமானது.
அதிக அளவில்
நாட்டுக்கோழிகளை வளர்க்கும்
போது 4-5 தடுப்பூசிகள் கட்டாயம்
போட வேண்டியது அவசியம். ஒரு சில
சமயங்களில் மட்டுமே காக்சீடியோசிஸ்
என்னும் இரத்தக்கழிச்சல் நோயால்
நாட்டுக் கோழிகள்
பாதிக்கப்படுகின்றன. ஆனால் வீரிய
இனக்கோழிகள்
தொட்டாச்சிணுங்கியைப் போல் அதன்
பராமரிப்பில் சிறு தவறு நேர்ந்தாலும்
இரத்தக் கழிச்சல் நோயால்
பாதிக்கப்பட்டுவிடும்.
நாட்டுகோழிகளுக்கு மேரக்ஸ்
வியாதியும் கம்போரா வியாதியும்,
கொரைசா என்னும்
சிறுமூச்சுக்குழல் வியாதியும்
ஏற்படுவதில்லை. ஆனால் வீரிய
இனக்கோழிகள் இவைகளால்
பாதிக்கப்பட்டு முட்டை உற்பத்தி குறைவதுடன்
உயிரிழப்பு ஏற்படும். வீரிய
இனக்கோழிகள் கோடை காலத்தில்
வெப்பத்தைத் தாங்காமல் ஹீட் ஸ்டிரோக்
என்னும் நோயால் பாதிக்கப்பட்டு அதிக
கோழிகள் இறந்துவிடும். ஆனால்
நாட்டுகோழிகளுக்கு குறைந்த
அளவு இறகுகளும் மெல்லிய
கொழுபற்ற தோலும் உள்ளதால்
வெப்பத்தைத் தாங்கிக் கொள்கிறது.
நாட்டுக் கோழிகள் நெரிசலைத்
தாங்கும் குணம் கொண்டவை. ஆனால்
உயிரினக் கோழிகள் நெரிசலைத்
தாங்காது இறந்துவிடும். உயிரினக்
கோழிகள் பண்ணைகளில்
ஒரே கூட்டமாக ஒரு மூலைக்குச்
சென்றால் அதில் பெரும்பாலான
கோழிகள் இறந்துவிடும். நாட்டுக்
கோழிகளை வெளியூர்களுக்கு அனுப்பும்
போது ஒரே கோணிப்பையில் 80-100
கோழிகளைப்
போட்டு அனுப்பினாலும் இறக்காது.
ஆனால் உயிரினக்கோழிகள் அதிகம்
இறந்து விடும். நாட்டுக்
கோழி முட்டையின் மஞ்சள் கரு நல்ல
அடர்ந்த மஞ்சள் நிறத்துடன் கெட்டியாக
இருக்கும்.
கோழிகள் புல் பூண்டுகள்
சாப்பிட்டு வைட்டமீன் எ சத்து அதிகம்
உள்ளதால் மஞ்சள் கரு அடர்த்தியாக
உள்ளது. ஆனால் உயிரினக்
கோழி முட்டையில் மஞ்சள் கரு வெளிர்
மஞ்சள் நிறமாக இருப்பதோடு, நாட்டுக்
கோழி கருவைப் போல கெட்டியாக
இல்லாமல் நீர்த்தும் இருக்கும். நாட்டுக்
கோழிகள் 15-20 முட்டைகள் இட்டவுடன்
அடைக்கு உட்கார்ந்து விடும் ஆனால்
உயிரினக்
கோழிகளுக்கு அடைகாக்கும் குணம்
கிடையாது. நாட்டுக்கோழிகள்
வெளியில் மேய்ச்சலுக்குச்
சென்று தீவனத்தை உண்ணும் குணம்
கொண்டது. ஆனால் உயிரினக் கோழிகள்
வெளியில் சென்று மேயாது.
நாட்டுக்கோழிகளை உயிரினக்
கோழிகள்
வளர்ப்பது போன்று கலப்புத்தீவனம்
கொடுத்து வளர்த்தால் அவை சரியாக
வளர்வதில்லை.
நாட்டுக் கோழி இறைச்சியின்
மருத்துவ குணங்கள் :
கடக்நாத் என்னும் கருங்கோழிகள்
மத்தியப் பிரதேசத்தைத் தாயகமாகக்
கொண்டது. இக்கோழியின்
இறைச்சி கருப்பாக இருப்பதால்
இதற்கு பிளாக் மீட் சிக்கன்
அல்லது காலாமாசி என்று அழைக்கின்றனர்.
இதன் இறைச்சி ருசியாகவும்,
மணமாகவும் இருப்பதுடன் மருத்துவ
குணமும் கொண்டது.
இக்கோழி இறைச்சியை அதிக நாள்பட்ட
நோய்களுக்கு மருந்தாகப்
பயன்படுத்துகின்றனர். ஆண்மை குணம்
குறைந்த ஆண்கள் கடக்நாத்
இறைச்சியை சாப்பிட்டால்
வயாக்ரா மருந்தைப் போல
ஆண்மையை அடைவார்கள்.
ஹோமியோபதி மருத்துவத்தில்
நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு கடக்நாத்
கோழி இறைச்சி பயன்படுத்தப்படுகிறது.
கடக்நாத் கோழி இறைச்சியில்
கொலஸ்டரால் சத்து மிகவும்
குறைவு என்பதால் இருதய நோய்
உள்ளவர்களுக்கும்
இரத்தக்கொதிப்பு உள்ளவர்களுக்கும் ஏற்ற
இறைச்சியாகும். மேலும் அதிகமான
அமினோ அமிலங்களும்
மனிதர்களுக்குத் தேவையான
ஹார்மோன் சத்துக்களும் அதிகம்
உள்ளது.
“நாட்டுக் கோழி வளர்ப்போம்
வீட்டு வருமானம் பெருக்குவோம்”


#TkpFarms
#Iniyan
www.nattukozhifarms.in
www.facebook.com/tk.pannai
#nattu kozhi valarpu
#nattukozhivalarputamilnadu


இந்த பக்கத்தை விருப்பம் தெரிவியுங்கள் உங்களுக்கு
தேவையான நாட்டு கோழி சம்பந்தமான
அனைத்து தகவல்களும் கிடைக்கும்.

https://www.facebook.com/tk.pannai

மேலும் எங்களிடம் ..
உங்கள் தொழிலை மேம்படுத்த வேண்டுமா ..

வெப் சைட் டிசைன்கள்
Web site desining

டொமைன் பதிவு
Domain Registration

சோசியல் மீடியா ப்ரமோசன்
Social media promotion

ஆகியவை குறைந்த விலையில் செய்து தரப்படும் ..
விவரங்களுக்கு ..

#TkpFarms
#Iniyan
www.nattukozhifarms.in
www.facebook.com/tk.pannai
#nattu kozhi valarpu 
#nattukozhivalarputamilnadu


எனது பண்ணையின் இன்றைய புதிய வரவு ..
மேலும் நாட்டு கோழி சம்பந்தமான விபரங்களுக்கு ..
#‎TkpFarms‬
‪#‎Iniyan‬
www.nattukozhifarms.in
www.facebook.com/tk.pannai
#nattu kozhi valarpu 
#nattukozhivalarputamilnadu

பாம்புகளை விரட்டும் கிண்ணி கோழிகள்!

பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின் மற்றும் குறைந்தளவு கொழுப்புச் சத்து உள்ள கிண்ணி கோழிகளை வளர்த்து விவசாயிகள் பலன் பெற லாம் என கால்நடைத்துறையினர் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.
கிண்ணி கோழி வளர்ப்பு முறைகள் குறித்து சிவ கங்கை மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கிண்ணி கோழியை சிறு, குறு விவசாயிகள் வளர்க்கலாம். கிண்ணி கோழியில் காதம்பரி, சிதம்பரி, ஸ்வேதாம்பரி என 3 ரகங்கள் உள்ளன. இந்த கோழி அனைத்து காலநிலைக்கும் ஏற்றது. இந்த கோழிகளை வளர்க்க பெரிய அளவி லான பண்ணை அமைக்க தேவையில்லை. வீடுகளில் கூட வளர்க்கலாம். நன்கு மேயும் திறன் கொண்டது. கோழித்தீவனத்திற்கு பயன்படாத அனைத்து வகை யான தீவனங்களையும் உணவாக உட்கொள்ளும்.

எட்டு வாரத்தில் அரை கிலோ எடை இருக்கும். 12வது வாரத்தில் ஒரு கிலோ எடை இருக்கும். 230 நாட்கள் முதல் 250 நாட்களுக்குள் முட்டை யிட ஆரம்பிக்கும். ஒவ்வொரு கோழியும் 100 முதல் 120 முட்டைகள் வரை இடும். ஓடு கடின மாக இருப்பதால் எளிதில் முட்டை உடையாது. நீண்ட நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
வளர்த்தால் லாபம் என கால்நடை துறை ஐடியா
எட்டு வாரத்தில் அரை கிலோ எடை இருக்கும். 12வது வாரத்தில் ஒரு கிலோ எடை இருக்கும். 230 நாட்கள் முதல் 250 நாட்களுக்குள் முட்டை யிட ஆரம்பிக்கும். ஒவ்வொரு கோழியும் 100 முதல் 120 முட்டைகள் வரை இடும். ஓடு கடின மாக இருப்பதால் எளிதில் முட்டை உடையாது. நீண்ட நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
இந்த கோழியின் இறைச்சியில் அதிக அளவு வைட்டமின்களும், குறைவான கொழுப்புச் சத்தும் உள் ளன. சத்து குறைந்தவர்கள் இக்கோழி இறைச்சியை உணவாக சாப்பிடலாம். இக்கோழி வளர்க்கப்படும் இடங்களில் பாம்பு போன்ற விஷ ஜந்துகள் அண்டாது. இவ்வாறு தெரிவித்தனர்.

#‎TkpFarms‬
‪#‎Iniyan‬
www.nattukozhifarms.in
www.facebook.com/tk.pannai

செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட தீவனங்கள்

1.எண்ணெய் நீக்கப்பட்ட சால்விதைத்தூள்
சால் விதையிலிருந்து எண்ணெய் எடுக்கும் போது கிடைக்கும் உபபொருட்களே இத்தூள்கள். இவை பார்ப்பதற்கு தானியங்களைப் போல் இருக்கும். இதில் டேனின் அதிகம் இருப்பதால் குறைந்தளவே தீவனத்தில் பயன்படுத்தவேண்டும்.
2.மரவள்ளித்தூள்
இது மரவள்ளிக் கிழங்கிலிருந்து பெறப்படுகிறது. இதில் ஆற்றல் அதிகம். சில இரகங்களில் சைனோஜென்க் என்னும் பொருட்கள் உள்ளன. கிழங்கை சிறிது நேரம் வெயிலில் உலர்த்தி, கூடு செய்வதன் மூலம் இதைப் போக்கலாம்.
3.கரும்புச்சக்கை
தானிய வகைகளுக்குப் பதில் இவை 45 சதவிகிதம் வரை பயன்படுத்தலாம். இதில் தாதுக்கள் அதிகம் இருப்பதால் அதிக அளவு கொடுத்தால் கழிவுகள் நீராக வெளியேற வாய்ப்புள்ளது.
4.சிறுதானியங்கள்
சாமை,பனிவரகு போன்ற சிறுதானியங்கள் மஞ்சள் சோளத்திற்குப் பதில் 20 சதவிகிதம் வரை பயன்படுத்தலாம். ராகி,கம்பு, சோளம் போன்றவையும் தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றது.
மேலும் விவரகங்ளுக்கு :
‪#‎TkpFarms‬
‪#‎Iniyan‬
www.nattukozhifarms.in
www.facebook.com/tk.pannai